குழந்தையிடம் தங்க தாயத்தை பறித்தவர் கைது

குழந்தையிடம் தங்க தாயத்தை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-27 20:09 GMT

பொன்மலைப்பட்டி:

திருச்சி மேல கல்கண்டார்கோட்டை பரமசிவம் தெருவை சேர்ந்தவர் விவேக்குமார். இவரது மனைவி சிவரஞ்சனி(வயது 24). இவர் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் உள்ள ஒரு பேக்கரிக்கு தின்பண்டங்கள் வாங்க சென்றார். அங்கு அந்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர், குழந்தை அணிந்திருந்த ஒன்றரை கிராம் தங்க தாயத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். அவரை அங்கிருந்த இளைஞர்கள் சுற்றி வளைத்து பிடித்து ரோந்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திருச்சி மேல கல்கண்டார்கோட்டை சாமிநாதன் தெருவை சேர்ந்த சுதாகர் (45) என்பது தெரியவந்தது. இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்