ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சங்கிலி பறித்தவர் கைது

நெல்லையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சங்கிலி பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-27 21:24 GMT

நெல்லை சந்திப்பு தெற்கு பாலபாக்யாநகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 59). இவர் சம்பவத்தன்று ராம்தியேட்டர் பகுதியில் இருந்து நெல்லை சந்திப்புக்கு அரசு பஸ்சில் சென்றார். அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அவர் பஸ்சில் இருந்து இறங்கும்போது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலி மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து லட்சுமி நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பஸ்சில் வந்த நெல்லை பேட்டை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த மைக்கேல் (60) என்பவர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, லட்சுமி கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மைக்கேலை கைது செய்தனர். அவர் மீது கன்னியாகுமரியில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்