தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்தவர் கைது

கொட்டாம்பட்டி அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-04 19:41 GMT

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள அய்யாபட்டியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் மனோஜ்குமார் (வயது 26). இவர் மேலூர் அருகே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந்தேதி நள்ளிரவு இவர் வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.

கொட்டாம்பட்டி அருகே உள்ள திருச்சுனை விலக்கு நான்கு வழி சாலையில் வந்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் மனோஜ்குமாரை மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்திபாலாஜி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக சேக்கிபட்டியை சேர்ந்த சேகர் மகன் ராமர் (23) கைது செய்யப்பட்டார். விசாரணையில் மனோஜ்குமாரிடம் செல்போன் வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து செல்போன் மீட்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்