2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-20 18:30 GMT

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுமி மற்றும் 4 வயது சிறுமி ஆகியோர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த திருமுருகன் (வயது 47) என்பவர் அந்த சிறுமிகளிடம் குடிபோதையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் திருமுருகனை பிடித்து அரும்பாவூர் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்