பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
திண்டுக்கல்லில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணபிரகாஷ் (வயது 19). கூலித்தொழிலாளி. இவர், ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கியதாக, மாணவியின் பெற்றோர் திண்டுக்கல் மேற்கு போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து மேற்கு போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சரவணபிரகாசை கைது செய்தனர்.