கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளையடித்த ஆசாமி கைது

மார்த்தாண்டத்தில் கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்தவரை ேபாலீசார் துரத்தி சென்று கைது செய்தனர்.

Update: 2022-12-10 18:45 GMT

குழித்துறை, 

மார்த்தாண்டத்தில் கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்தவரை ேபாலீசார் துரத்தி சென்று கைது செய்தனர்.

உண்டியல்கள் கொள்ளை

மார்த்தாண்டம், களியக்காவிளை, அருமனை போலீஸ் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி கோவில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இதுதொடர்பாக போலீசார் கோவில்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அவற்றில் பதிவான நபர் குறித்து விசாரணை செய்த போது நாகர்கோவில் ராமன்புதூர் கோவில்தெருவை சேர்ந்த அன்பரசன் (வயது29) என்பவர் கைவரிசை காட்டி வந்தது தெரிய வந்தது.

துரத்தி பிடித்தனர்

இதைத்தொடர்ந்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் போலீசார் மார்த்தாண்டம் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அன்பரசன் நிற்பதை கண்டனர். போலீசாரை கண்டதும் அன்பரசன் தப்பி ஓடினார். உடனே போலீசார் அவரை சிறிது தூரம் துரத்தி சென்று பிடித்தனர்.

தொடர்ந்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர் 'கோவில்களில் கொள்ளையடித்த பணத்தில் ஓட்டல், சினிமா தியேட்டர் என சுற்றி திரிந்து விலை உயர்ந்த பொருட்களை வாங்கி உல்லாசமாக வாழ்ந்தேன்' என போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அன்பரசனை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்