தனியார் நிறுவன ஊழியரை வெட்டியவர் கைது
தனியார் நிறுவன ஊழியரை வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே உள்ள பவளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சந்தன மகாலிங்கம் (வயது 43). தனியார் நிறுவன ஊழியரான இவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அதே கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (35) என்பவர் முன்விரோதம் காரணமாக தொரட்டியால் சந்தன மகாலிங்கத்தை வெட்டி படுகாயப்படுத்தியதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சந்தன மகாலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு வேல்முருகனை கைது செய்தனர்.