வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக வாலிபரிடம் ரூ.5 லட்சம் பெற்று மோசடி செய்தவர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக வாலிபரிடம் ரூ.5 லட்சம் பெற்று மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
துவரங்குறிச்சி:
முகநூல் மூலம் பழக்கம்
மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா கல்லாம்பட்டியை சேர்ந்தவர் முகமது மீரான். இவரது மகன் ஷகில் அக்தர் (வயது 25). இவருக்கு முகநூல் மூலம் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள வடக்கு எல்லைகாட்டுப்பட்டியை சேர்ந்த வடிவேல்(வயது 38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் வடிவேல், வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் முகவர் நிறுவனம் வைத்து தொழில் செய்து வருவதாகவும், ஷகில் அக்தருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி ரூ.5 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
கைது
ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. இது குறித்து துவரங்குறிச்சி போலீசில் ஷகில் அக்தர் புகார் அளித்தார். அதன்பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வடிவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.