இளம் பெண்ணை காதலிக்க கட்டாயப்படுத்திய வாலிபர் கைது

இளம்பெண்ணை காதலிக்க கட்டாயப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-07 16:26 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா வேளானந்தல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் மணிகண்டன் (வயது 25). இவர், 17 வயது இளம் பெண்ணை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் தன்னை காதலிக்க வேண்டும் என்றும், திருமணம் செய்து கொள்ளுமாறும் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.

இதுகுறித்து இளம்பெண் நேற்று திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்