கிறிஸ்தவ போதகரின் கார் கண்ணாடிகளை உடைத்தவர் கைது
கிறிஸ்தவ போதகரின் கார் கண்ணாடிகளை உடைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஜூப்ளி ரோட்டு தெருவை சேர்ந்த பீட்டர் மகன் யோசுவா(வயது 58). இவர் ஜெயங்கொண்டம் அப்போஸ்தல கிறிஸ்தவ சபையின் போதகராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்த சபைக்கு பெரியதத்தூர் கிராமத்தில் இருந்து ஆனந்த் மனைவி சுதா வருவதாகவும், சுதாவுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரை நேரில் சென்று பார்த்து வருவதற்காக யோசுவா மற்றும் அவரது மனைவி ஷீலா உதவியாளருடன் பெரியதத்தூர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அப்போது இவர்களின் வருகையை பிடிக்காத பெரியதத்தூர் ரோட்டுத் தெருவை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சக்தி(57) என்பவர் காரில் முன்பக்க மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் சக்தி மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.