ரேஷன் கடை ஊழியரை தாக்கியவர் கைது
ரேஷன் கடை ஊழியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
அம்பை:
மணிமுத்தாறு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக ரவிகுமார் (வயது 35) பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பக்கத்து ஊரான சிங்கம்பட்டியைச் சேர்ந்த செந்தில் (43) அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு செல்லாமல், மணிமுத்தாறு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று ரவிகுமாரிடம் சீனி தருமாறு கேட்டார்.
ஆனால் ரவிகுமார் சீனி வழங்காததால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில் அவதூறாக பேசி, பணி செய்ய விடாமல் தடுத்து ரவிகுமாரை தாக்கி மிரட்டினார். இதுகுறித்த புகாரின்பேரில், கல்லிடைக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தார்.