புதுப்பேட்டை அருகே மின் ஊழியரை தாக்கியவர் கைது

புதுப்பேட்டை அருகே மின் ஊழியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-16 18:45 GMT

புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே அங்குசெட்டிப்பாளையம் ஓடை பகுதியில் மின் கம்பிகளுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை அப்பகுதி மின்வாரிய ஊழியர்கள் வெட்டி அகற்றினர். வெட்டப்பட்ட மரக்கிளைகள் அதே பகுதியை சேர்ந்த சிற்பி சக்திவேல்(வயது 38) என்பவரது வீட்டின் அருகில் கிடந்துள்ளது. இதைபார்த்த சக்திவேல், மின்வாரிய ஊழியர் காத்தவராயனிடம் (50) தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவரை ஆபாசமாக திட்டி, தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த காத்தவராயன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டா் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்