ஓசூர்
ஓசூர் இந்திரா நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 38). டிரைவர். பழைய வசந்த் நகர் பகுதியை சேர்ந்த பொன் வண்ணன், பவித்ரன், மாதேஷ் மற்றும் தோட்டகிரி ரோடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் சேகரிடம் நிலம் வாங்கி தருமாறு கேட்டனர். அவரும், அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரிடம் அழைத்து சென்று பேசியபோது, வெங்கடேஷ் நிலத்தை விற்க சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொன்வண்ணன் உள்ளிட்டோர் சேகரிடம் ரூ.2 லட்சம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தான் பணம் ஏதும் வாங்கவில்லையே? என்று கூறி பணம் தர மறுத்து விட்டார்.
இதனால் கோபம் அடைந்த பொன் வண்ணன் தரப்பினர் சேகரை தாக்கினர். இதுகுறித்து அவர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்வண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைதான பொன் வண்ணன் மீது ஏற்கனவே ஓசூர் அட்கோ போலீசில் 2 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.