தம்பி மனைவியை தாக்கியவர் கைது
தம்பி மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மேலசிந்தாமணி கிராமத்தில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி தனலட்சுமி(வயது 32). இவர் திருப்பூரில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் தனது பிள்ளைகளை திருப்பூரில் உள்ள அவரது தங்கை வீட்டில் விட்டுவிட்டு, மேலசிந்தாமணியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சத்தியமூர்த்தியின் அண்ணன் வீரமணி(42) என்பவர், தனலட்சுமி குறித்தும், அவரது பிள்ளைகளை திருப்பூரில் விட்டுவிட்டு வந்தது குறித்தும் தகாத முறையில் திட்டி, புல் அறுக்கும் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தனலட்சுமியின் தலையில் காயம் ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசில் தனலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து, வீரமணியை கைது செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.