போலீசாரை அவதூறாக முகநூலில் பதிவிட்டவர் விமான நிலையத்தில் கைது

போலீசாரை அவதூறாக முகநூலில் பதிவிட்டவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-30 20:08 GMT

மேலூர், 

மேலூரில் உள்ள கருத்தபுலியன்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 44). இவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாலமுருகனின் மகன் தீபக்ராஜ் மேலூரில் போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார்சைக்கிளை ஓட்டியதாக அவர் மீது மேலூர் போலீசார் அபராதம் விதித்தனர். அப்போது துபாயில் இருந்த பாலமுருகன் மேலூர் போலீசாரை கண்டித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டார். இதுகுறித்து பாலமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் எப்போது இந்தியாவுக்கு வந்தாலும் அவரை கைது செய்ய அனைத்து விமான நிலையங்களுக்கும் உஷார்படுத்தப்பட்டனர். இந்நிலையில் 7 மாதங்களுக்கு பின் துபாயில் இருந்து விமானம் மூலம் பாலமுருகன் திருச்சி வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஏற்கனவே லூக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்த பாலமுருகனை அடையாளம் கண்டு அவரை பிடித்து மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி திருச்சி விமான நிலையம் சென்று பாலமுருகனை கைது செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்