மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை திருவிழந்தூர் பிள்ளையார் கோவில் தெருவில் சாராய விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சாராய விற்பனையில் ஈடுபட்ட மணல்மேடு சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த பாஸ்கர் (வயது48) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 55 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.