செல்போன் கடையில் திருடியவர் கைது
செல்போன் கடையில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம் அருகே வேட்டைக்காரனிருப்பு கடைவீதியில் உள்ள செல்போன் கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன்கள், மடிக்கணினி திருட்டு போனது. இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர் கோட்டை மணி (வயது 49), மணிகண்டன் ஆகியோர் செல்போன் கடையில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து கோட்டைமணியை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 3 செல்போன்களையும், ஒரு மடிக்கணினியையும் கைப்பற்றினர். தலைமறைவாக உள்ள மணிகண்டனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.