தர்மபுரி மாவட்டத்தில் 521 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு

தர்மபுரி மாவட்டத்தில் 521 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று பென்னாகரத்தில் நடந்த விழாவில் கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

Update: 2022-06-29 16:04 GMT

தர்மபுரி மாவட்டத்தில் 521 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று பென்னாகரத்தில் நடந்த விழாவில் கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

ஊட்டச்சத்து பெட்டகம்

தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி பென்னாகரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார். ஜி.கே.மணி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் வீரமணி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ஜான்சிராணி, தாசில்தார் அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலன், பேரூராட்சி செயல் அலுவலர் கீதா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பெற்றோர்கள், அங்கன்வாடி குழந்தைகள் கலந்து கொண்டனர்.

மருத்துவ சிகிச்சை

விழாவில் கலெக்டர் சாந்தி பேசுகையில், உடல் ஆரோக்கியமே குழந்தைகளின் ஆரோக்கியமான மனநிலைக்கும், ஆரோக்கியமான செயல்பாடுகளுக்கும் முக்கியம். தர்மபுரி மாவட்டத்தில் எடை, உயரம் கணக்கிடப்பட்டதில் 28,936 குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இந்த குழந்தைகள் அனைவருக்கும் கடந்த மே மாதம் 25 முதல் கடந்த 22-ந்தேதி வரை சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 521 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்