நாய்கள் கடித்ததில் ஆண் மயில் காயம்

நாய்கள் கடித்ததில் ஆண் மயில் காயம் அடைந்தது.

Update: 2022-10-08 18:50 GMT

அரியலூர் மாவட்டம், வெளிப்பிரிங்கியம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயி பருத்தி வயலில் 2 வயதுடைய ஆண் மயிலை நாய்கள் கடித்து கொண்டிருந்ததை கண்ட அப்பகுதி இளைஞர்கள் நாய்களை விரட்டினர். பின்னர் அரியலூர் வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மயிலை மீட்டனர். பின்னர் கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்கள் மயிலுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்