தனுஷ்கோடி கடற்கரையில் ஆண் பிணம்

தனுஷ்கோடி கடற்கரையில் ஆண் பிணம் கிடந்தது.

Update: 2023-08-08 18:45 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் நேற்று 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. இதுகுறித்து மீனவர்கள், கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து ராமேசுவரம் கடலோர போலீசார் அங்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

பின்னர் இறந்தவரின் உடலை கைப்பற்றி ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்