கிணற்றில் ஆண் பிணம்

ராதாபுரம் அருகே கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார்.

Update: 2022-09-24 20:47 GMT

ராதாபுரம்:

ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரத்தை சேர்ந்த சுடலை மகன் முருகன் (வயது 39). இவருக்கு திருமணம் முடிந்து 10 வருடங்கள் ஆகிறது. இந்தநிலையில் அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். இதற்கிடையே அப்பகுதியில் தோட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் முருகன் பிணமாக மிதந்தார்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று அவரது உடலை மீண்டு வெளியே கொண்டு வந்தனர். ராதாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்