வேளாங்கண்ணி:
கீழையூர் போலீஸ் சாரகம் செருதூர் வெள்ளையாற்றின் மீன்படி இறங்குதளத்தின் அருகே 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக கீழையூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற கீழையூர் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.