குளத்தில் ஆண் பிணம்
மயிலாடுதுறையில் குளத்தில் ஆண் பிணம் போலீசார் விசாரணை
மயிலாடுதுறை நகரம் 4-ம் நம்பர் புதுத்தெருவில் மேட்டுத்தெரு குளம் உள்ளது. இந்த குளத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குளத்தில் அழுகிய நிலையில் கிடந்த பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இறந்து கிடந்தவர் பச்சைநிற கோடு போட்ட சட்டை அணிந்துள்ளார். இவர் யார் என்று அடையாளம் காண முடியாததால் கடந்த 3 தினங்களில் காணாமல் போனவர்களின் விவரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதையடுத்து கைப்பற்றப்பட்ட உடலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.