கொள்ளிடம் ஆற்றில் ஆண் பிணம்

கொள்ளிடம் ஆற்றில் ஆண் பிணம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

Update: 2022-11-13 18:45 GMT

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வெள்ளமணல் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கரை ஒதுங்கினார். இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர் யார்? எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? அல்லது ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா? என்பது பற்றி கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்