காட்டுப்பகுதியில் ஆண் பிணம்
நெல்லை அருகே காட்டுப்பகுதியில் ஆண் பிணம் கிடந்தது.
நெல்லை அருகே கங்கைகொண்டான் காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.