தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம்

ஆற்காட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.

Update: 2023-10-25 19:06 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பாலாற்றங்கரையில் உள்ள வேப்பமரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து போலீசார் தூக்கில் பிணமாக கிடந்தவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்