புதிய பஸ் நிலையத்தில் ஆண் பிணம்

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-18 18:45 GMT

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து கட்டிகானப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் முகமது சுபன் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்?. எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்