கோடியக்கரை கடற்கரையில் ஆண் பிணம்
வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடற்கரையில் ஆண் பிணம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை சவுக்கு பிளாட் அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. இது குறித்த தகவலின்பேரில் வேதாரண்யம் கடலோர காவல் படையினர் அங்கு சென்று உடலை மீட்டனர். அந்த ஆணின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, மீனவரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.