ரெயில் நிலையம் அருகே ஆண் பிணம்

ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே ஆண் பிணம் கிடந்தது.

Update: 2023-03-11 17:21 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள ரெயில் நிலையம் அருகே புது ஓட்டல் தெரு பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கும் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் சென்று இறந்தவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர் ரெயில் நிலையம் பகுதியில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்ததாகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாகவும் தெரியவந்தது. மேலும் இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்