மலேரியா ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
தலைஞாயிறு பகுதியில் மலேரியா ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
வாய்மேடு:
தலைஞாயிறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நீர்முளை, நாலுவேதபதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மலேரியா தினம் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து தலைஞாயிறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மலேரியா ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனை தொடர்ந்து நடந்த உலக மலேரியா ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்துக்கு, தலைஞாயிறு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் தலைமை தாங்கினார். தலைஞாயிறு மருத்துவ அலுவலர் கீர்த்தனா முன்னிலை வகித்தார்.