யானை தந்தங்களால் பொம்மைகள் செய்து விற்பனை; 3 பேர் கைது - வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
யானை தந்தங்களால் பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்த 3 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
யானை தந்தங்களால் பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்த 3 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
யானை தந்தத்தில் பொம்மை
மதுரையில் யானை தந்தங்களால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, மதுரை வன உயிரின சரக அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மதுரை தாலுகா ஜே.ஜே. நகரை சேர்ந்த பொன் இருளன் என்ற முத்து, குலமங்கலம் மெயின் ரோடு பாண்டியன் நகரை சேர்ந்த பீட்டர் சகாயராஜ் ஆகியோர் மதுரையில் யானை தந்தங்களால் செய்யப்பட்ட பொம்மைகளை விற்பனை செய்தது தெரியவந்தது.
3 பேர் கைது
இதை தொடர்ந்து வனத்துறைஅதிகாரிககள் அவர்களை மடக்கி பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தெற்கு ரதவீதியை சேர்ந்த ரஞ்சித் ராஜன் என்பவர் இந்த யானை தந்தங்களால் ஆன பொம்மைகளை செய்த உரிமையாளர் என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த யானை தந்தத்தால் ஆன பொம்மையை பறிமுதல் செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய 2 பேரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.