பராமரிப்பு பணிகள்: அவனியாபுரம், தெப்பக்குளம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

பராமரிப்பு பணிகள் காரணமாக அவனியாபுரம், தெப்பக்குளம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2023-02-07 20:44 GMT


பராமரிப்பு பணிகள் காரணமாக அவனியாபுரம், தெப்பக்குளம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்பு பணி

மதுரை அனுப்பானடி, தெப்பம், அவனியாபுரம் மற்றும் வண்டியூர் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. ஆதலால் அங்கிருந்து மின் வினியோகம் பெறும் இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

அதன்படி அனுப்பானடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ராஜீவ்காந்தி நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, ஆவின் பால்பண்ணை, செண்பகம் மருத்துவமனை சுற்றுப்புறம், ஐராவதநல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய்நகர், கங்காநகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி. காலனி, முந்திரிதோப்பு மற்றும் சேவகப் பெருமாள் கோவில் பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

தெப்பம்

தெப்பம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி தெப்பம் ரோடு, அனுப்பானடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர்நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி. சந்து, மீனாட்சிநகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர். ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்ன கண்மாய், பாலரங்காபுரம், சண்முகா நகர், நவரத்தினபுரம், பிஸ்சர் ரோடு, இந்திரா நகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், மேல அனுப்பானடி கிழக்குப்பகுதி, தமிழன் தெரு, என்.எம்.ஆர். புரம், ஏ.ஏ. ரோடு, பி.பி. ரோடு, டி.டி. ரோடு, மீனாட்சி அவின்யூ மற்றும் திருமகள் நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

அவனியாபுரம்

அவனியாபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எம்.எம்.சி. காலனி, சி.ஏ.எஸ். நகர், பி.சி.எம். சொக்கு பிள்ளை நகர் முழுவதும், ஜெயபார் சிட்டி 4 மற்றும் 5, பைபாஸ் ரோடு முழுவதும், அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி, மல்லிகை வீடுகள், அவனியாபுரம் பஸ் நிலையம், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி முழுவதும், வைகை வீதிகள், வள்ளலானந்தாபுரம், ஜெ.ஜெ. நகர், வைக்கம் பெரியார் நகர் ரோடு, ரிங்ரோடு, பெரியசாமி நகர் முழுவதும், ஜவகர் நகர், ஜெயபாரத் சிட்டி, திருப்பதி நகர் முழுவதும், அண்ணாநகர், புரசரடி, ஜெ.பி. நகர், திருப்பரங்குன்றம் ரோடு, காசி தோட்டம், பெரியரத வீதி குடியிருப்பு பகுதிகள், பாம்பன் நகர் பாப்பாகுடி, டிமார்ட் அருகில், வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம், குடியிருப்பு, சின்ன உடைப்பு, ஏர் போர்ட் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராஜா உசேன் தெரிவித்துள்ளார்.

வண்டியூர்

வண்டியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வண்டியூர், பி.கே.எம். நகர், சவுராஷ்டிரா புரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்பு நகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், அன்பு மலர் தெரு, சிவா ரைஸ்மில் பின்புறம், சித்திவிநாயகர் கோவில் தெரு, மருதுபாண்டியர் தெரு, ஜூப்லி டவுன், அஸ்ட்ரா காலேஜ், வீரபாண்டி தெரு, விரகனூர், எல்.கே.டி. நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்