வாலாஜா ரோடு பகுதியில் பராமரிப்பு பணி: சென்னை-கோவை இன்டர்சிட்டி ரெயில்கள் பகுதியாக ரத்து
வாலாஜா ரோடு பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக சென்னை-கோவை இன்டர்சிட்டி ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டு உள்ளன.
சூரமங்கலம்:
அரக்கோணம்-காட்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள வாலாஜா ரோடு ரெயில் நிலையம் பகுதியில் பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12680) மற்றும் சென்னை சென்ட்ரல்- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12679) ஆகிய ரெயில்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது,
அதன்படி கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12680) கோவையில் இருந்து நாளை காலை 6.15 மணிக்கு புறப்பட்டு சேலம் வழியாக காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும். இந்த ரெயில் காட்பாடி முதல் சென்னை சென்ட்ரல் வரை செல்லாது. இதே போல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் சென்னை சென்ட்ரல்-கோவை இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12679) சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது., இந்த ரெயில் காட்பாடியில் இருந்து புறப்பட்டு கோவை வரை செல்லும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.