குடகனாறு அணையில் பராமரிப்பு பணி: மதகுகள் திறப்பால் வீணாகும் தண்ணீர்

குடகனாறு அணையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மதகுகள் திறக்கப்பட்டதால் தண்ணீர் வீணாக செல்கிறது.

Update: 2022-09-01 16:42 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஓடை, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து வெளியேறும் நீர் குடகனாற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் குடகனாற்றில் உள்ள லட்சுமணம்பட்டி தடுப்பணை உள்பட பல்வேறு தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது.

இந்நிலையில் வேடசந்தூர் குடகனாறு அணையில் தற்போது மதகுகள் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அணை திறந்த நிலையில் உள்ளது. இதனால் அணையில் தண்ணீர் தேங்காமல் வீணாக செல்கிறது. இந்நிலையில் குடகனாறு அணையில் நீரை தேக்கினால் மட்டுமே சுற்றுப்புற கிராம பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரும். எனவே குடகனாறு அணையில் பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்