மகிளா காங்கிரஸ் தலைவர் மீது பண மோசடி புகார்

அமெரிக்கா மலையாளிகளை ஏமாற்றி ரூ.14.6 லட்சம் மோசடி செய்ததாக மகிளா காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Update: 2022-12-21 11:39 GMT

பத்தனம்திட்டா:

பண மோசடியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் பெண் தலைவரும் வழக்கறிஞருமான விபிதா பாபு மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து உள்ளது.

காட்டூர்த்தியை சேர்ந்த மேத்யூ செபாஸ்டியன் என்பவர் திருவள்ளா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.மேத்யூ செபாஸ்டியன் அமெரிக்காவில் வசிப்பவர்.விபிதாவைத் தவிர, அவரது தந்தை பாபு தாமஸ் பெயரும் புகாரில் இடம்பெற்று உள்ளது.

கொரோனா காலம் முடிந்ததும் பணத்தைத் திருப்பித் தருவதாக விபிதா பாபு உறுதியளித்து இருந்தார் ஆனால் திருப்பி தரவில்லை ஜூன் 17ம் தேதி விபிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் பணம் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்