மகாசக்தி காளியம்மன் கோவில் திருவிழா

திருப்பாலைத்துறை மகாசக்தி காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2023-05-15 20:36 GMT

பாபநாசம்:

பாபநாசம் தாலுகா திருப்பாலைத்துறை அவுல்கார தெருவில் அமைந்துள்ள மகாசக்தி காளியம்மன் கோவில் ஆண்டு திருவிழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் மாலை சக்தி கரகம், அக்னி சட்டி வீதி உலா நடந்தது 2-வது நாள் காலையில் பால்குடம் காவடி புறப்பாடும், மதியம் சிறப்பு அபிஷேகமும், கஞ்சிவார்த்தலும், இரவு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும் நடந்தது. இதனைத் தொடர்ந்து அம்மன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்