மகாமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

மகாமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

Update: 2023-05-14 18:45 GMT

நீடாமங்கலம் ஒன்றியம் மேலாளவந்தச்சேரி ஊராட்சி மடப்புரம் கிராமத்தில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 7-ந்தேதி மகாமாரியம்மன், பாலவிநாயகர், பாலமுருகன், வீரனார், பெரியநாயகி அம்மன், முனீஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து தினந்தோறும் உபயதாரர்களின் மண்டகபடி நடந்தது. நேற்று காலை சாமிகளுக்கு அபிஷேக ஆராதனையும், மதியம் பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை மாவிளக்கு அர்ச்சனை, அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், சக்தி கரகம் எடுத்தல், மின் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. இன்று(திங்கட்கிழமை) காலை காப்பு அறுத்தல் நிகழ்ச்சியும், கிராமிய கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மடப்புரம் கிராம மக்கள், விழா குழுவினர், இளைஞர் மன்றம், மகளிர் குழுவினர் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்