மகாளய அமாவாசை-கோவில்களில் சிறப்பு வழிபாடு

மகாளய அமாவாசை-கோவில்களில் சிறப்பு வழிபாடு

Update: 2022-09-25 18:45 GMT

கோத்தகிரி

புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாட்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க சிறப்பான நாட்களாக கூறப்படுகிறது. இந்த நாளையொட்டி கோத்தகிரியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல நேற்று மாலை 4 மணிக்கு டானிங்டன் கருமாரியம்மன் கோவிலில் நவராத்திரி பூஜையின் முதல் நாள் பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதே போல கடைவீதி ஐயப்பன் கோவில், விநாயகர் கோவில், பண்ணாரி மாரியம்மன் கோவில், டானிங்டன் விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்