மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேக விழா
கெலமங்கலத்தில் மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
ராயக்கோட்டை
கெலமங்கலத்தில் மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி விநாயகர் ஹோமம், கங்கை ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் மற்றும் பால்குட ஊர்வலம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று அதிகாலை யாகசாலையில் புனிதநீர் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஜோதிட பண்டிதர் முருகேஷ் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.