மகாகாளியம்மன் கோவில் தேரோட்டம்

நாகை வெளிப்பாளையம் மகாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2023-04-23 18:45 GMT


நாகை வெளிப்பாளையம் மகாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சித்திரை திருவிழா

நாகை வெளிப்பாளையத்தில் மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் தொடக்கமாக பூச்சொரிதல் நிகழ்ச்சிநடந்தது. இதையடுத்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக மகாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதையடுத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து காலை 10 மணியளவில் மேளதாளங்கள் முழங்க தேரோட்டம் தொடங்கியது. பின்னர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த தேர் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்