திரவுபதி அம்மன் கோவிலில் மகாபாரத விழா

சோமசமுத்திரம் திரவுபதி அம்மன் கோவிலில் மகாபாரத விழா தொடங்கியது.

Update: 2022-05-22 14:02 GMT

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக மகாபாரத விழா நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில் திரவுபதி அம்மன் கோவிலில் மகாபாரத விழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காப்புக்கட்டி, கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் தருமர், அர்ஜூனன், பீமன், நகுலன், சகாதேவன் போத்துராஜா உள்ளிட்ட சுவாமிகளுக்கும், பக்தர்களுக்கும் காப்பு கட்டப்பட்டது.

தொடர்ந்து 15 நாட்கள் விழா நடக்கிறது. ஒவ்வொரு நாளும் கட்டைகூத்து கலைஞர்கள் மூலம் மகாபாரதம் நிகழ்ச்சி நடைபெறும். தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை மகாபாரதம் சொற்பொழிவு நடைபெறும். அப்போது அர்ச்சுனன் தபசு, கர்ணமோட்சம், துரியோதனன் படுகளம், தீமிதி திருவிழா நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்