கானியப்பர் மசராயர் கோவில் மகா சிவராத்திரி விழா

கானியப்பர் மசராயர் கோவில் மகா சிவராத்திரி விழா

Update: 2023-02-19 10:36 GMT

குடிமங்கலம்

கொங்கல்நகரத்தில் மிகவும் புகழ்பெற்றகானியப்பர் மசராயர் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு கொங்கல்நகரத்திலிருந்து கானியப்பர் மசராயர் குதிரை வாகனம், சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் திருவீதி உலா கொங்கல் நகரத்தில் தொடங்கி முக்கியவீதிகளின் வழியாகச் சென்று கோவிலை அடைந்தது. சிவராத்திரியை முன்னிட்டு கானியப்பர் மசராயர் மற்றும் தெய்வங்களுக்குசிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடந்தது. மகாசிவராத்திரி விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல்சோமவாரப்பட்டியில் மிகவும் புகழ்பெற்ற அமரபுயங்கரீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவையொட்டி அமரபுயங்கரீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. மகாசிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலில் விழித்திருந்து அதிகாலை வரை தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்