சரபேஸ்வரர் பீடத்தில் மகா நிகும்பலா யாகம்

சரபேஸ்வரர் பீடத்தில் மகா நிகும்பலா யாகம் நடைபெற்றது.

Update: 2023-10-16 19:13 GMT

நெமிலி அருகே கரியாக்குடல் கிராமத்தில் உள்ள மகா சரபேஸ்வரர் பீடத்தில் நேற்று முன்தினம் மகா நிகும்பலா யாகம் நடைபெற்றது. வேலூர் இறைவன்காடு துர்கா அம்மா தலைமை தாங்கினார். மகா சரபேஸ்வரர் பீடாதிபதி ஞானபிரகாச சுவாமிகள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் ராஜீவ் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் உலக நன்மைக்காக வேதமந்திரங்கள் முழங்க யாக குண்டத்தில் மிளகாய், நெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு யாகம் நடத்தப்பட்டது. இதில் சென்னை, வேலூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்