லால்குடியில் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; இன்று நடக்கிறது
லால்குடியில் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; இன்று நடக்கிறது
லால்குடி கீழ வீதியில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதையொட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த 8-ந் தேதி கொள்ளிடம் ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. 9-ந் தேதி விநாயகர் வழிபாடு, மஹா கணபதி ஹோமம் மற்றும் முதல்கால யாக பூஜை நடைபெற்றது.
நேற்று இரண்டு மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடத்தப்படுகிறது. அதன் பின் காலை 10.30 மணி அளவில் ராமர் மடம் மற்றும் மாரியம்மன், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சூரியன், தக்கார் நித்யா தலைமையில் மகா மாரியம்மன் கோவில் அறக்கட்டளை குழுவினர் செய்து வருகின்றனர்.