மகா காளியம்மன் கோவில் குடமுழுக்கு

திருமக்கோட்டை அருேக சுரோத்திரியம் மகா காளியம்மன் கோவில் குடமுழுக்கு இன்று நடக்கிறது.

Update: 2023-09-02 18:45 GMT

திருமக்கோட்டை:

திருமக்கோட்டை அருேக சுரோத்திரியம் மகா காளியம்மன் கோவில் குடமுழுக்கு இன்று நடக்கிறது.

மகா காளியம்மன் கோவில்

திருமக்கோட்டை அருகே சுரோத்திரியத்தில் மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 1 மாதமாக புதிய கட்டுமான பணிகள், வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து குடமுழுக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி பூஜை, கோபூஜை, வாஸ்து சாந்தி, பூர்வாங்க பூஜைகள், கும்பஸ்தானம், மருந்து சாத்துதல் முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை நடைபெற்றது.

குடமுழுக்கு

இன்று காலை 9 மணிக்கு கடம் புறப்படாகி முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. மற்றும் அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் கோவில் அர்ச்சகர் ராஜேந்திரன் வேளார், கணபதி வேளார், நீலாம்பாள் குடும்பத்தினர்கள் செய்து வருகின்றனர். குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற உள்ளது. பாதுகாப்பு பணியில் திருமக்கோட்டை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்