ஓசூர்
ஓசூரில், ராதாகிருஷ்ணா பஜனை மண்டலி சார்பில் ராதா கல்யாண மகோத்சவ விழா நடைபெற்றது. ஓசூர் பஸ்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கணபதி பூஜை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், அஷ்டபதி பஜனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து, சூரிய நமஸ்காரம், ஜானவாசம், வீதி பஜனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், முக்கிய நிகழ்ச்சியாக ராதாகிருத்தி விவாஹ வைபவமும் நடைபெற்றது. பின்னர் மகாதீபாராதனை நடந்தது. விழாவை விஷ்ணம்பேட்டை ஹரிபாஸ்கர் பாகவதர் மற்றும் குழுவினர் முன்னின்று நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.