மதுரை வீரன் கோவில் குடமுழுக்கு

மகிமலை ஆற்றங்கரை மதுரை வீரன் கோவில் குடமுழுக்கு நடந்தது

Update: 2022-09-05 18:09 GMT

குத்தாலம்:

குத்தாலம் அருகே மாம்புள்ளி கிராமத்தில் மகிமலை ஆற்றங்கரையில் உள்ள மதுரை வீரன் கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது. முன்னதாக அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கும்ப அலங்காரம், யாகசாலை பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. இதை தொடர்ந்து கடங்கள் புறப்படாகி கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் சாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் மனோகரன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். குத்தாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்