பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் மதுரை மாணவர் 2-ம் இடம்

பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் மதுரை மாணவர் 2-ம் இடம் பிடித்தார்

Update: 2023-02-02 21:03 GMT


தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர். இதில், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில், மதுரை எம்.சி. மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.முகமது அமீர் 48-50 கிலோ எடைப்பிரிவில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா, கல்வி மாவட்ட அலுவலர்கள், மாவட்ட உடற்கல்வியியல் ஆய்வாளர், பயிற்சியாளர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்