மதுரை நகர் வடக்கு புதிய போலீஸ் துணை கமிஷனர் பதவியேற்பு

மதுரை நகர் வடக்கு புதிய போலீஸ் துணை கமிஷனர் பதவியேற்றார்.

Update: 2023-08-10 20:30 GMT


தமிழக முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் துணை கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மதுரை வடக்கு பகுதி துணை கமிஷனர் அரவிந்த் சிவகங்கை மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சினேகா பிரியா வடக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

அவர் நேற்று முறைப்படி கமிஷனர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அதிகாரிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

போலீஸ் துணை கமிஷனர் சினேகா பிரியாவின் கணவர் மதுரை மாநகராட்சி கமிஷனர் ஆவார்.

Tags:    

மேலும் செய்திகள்