மதுரை மீனாட்சி கல்லூரி பேராசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மதுரை மீனாட்சி கல்லூரி பேராசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்

Update: 2023-05-04 20:48 GMT


தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அரசினர் மீனாட்சி மகளிர் கல்லூரி ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, பேராசிரியர்களுக்கு கல்லூரிக்கல்வி இயக்குனர் அலுவலகம் பதவி உயர்வுக்கான பணிமேம்பாடு உத்தரவு வழங்கிய பிறகும் நிதியாளர் அதனை நிறுத்தி வைப்பது சரியானதல்ல. பேராசிரியர்களை பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும். கல்லூரி மற்றும் மாணவிகளின் நலன்கருதி செலவிடப்படும் தொகையை உரிய ஆவணங்களுடன் இணைத்தும் திரும்ப வழங்குவதில்லை. எதிர்பாராத அவசர தேவைக்கான ஒரு மணி நேர முன்அனுமதி மற்றும் தாமத வருகைக்கான உரிமை கடந்த 3 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கல்லூரி விடுதி பேராசிரியர் பணியிடத்துக்கு கூடுதல் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலக பணியாளர் பற்றாக்குறையால், மாணவிகளுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்குவது தற்போது வரை தாமதமாகியுள்ளது. ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தொழில்திறன் வாய்ந்த நபர்களை பணியமர்த்த வேண்டும். ஆசிரியர் விரோதப்போக்குடன் நடந்து வரும் நிதியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்